ஜோலார்பேட்டையில் வாலிபர் தற்கொலை

ஜோலார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டையில் வாலிபர் தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் பூனை குட்டி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது40). இவர் 10 ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்து விட்டு சொந்த ஊர் வந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

திருப்பதி நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த திருப்பதியை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே திருப்பதி இறந்து விட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து பிரேதத்தை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com