கும்பகோணத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

கும்பகோணத்தில் திருமண பத்திரிகை கொடுக்க வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
Published on

கும்பகோணம்:

ராமநாதபுரம் மாவட்டம் சேது நகர் சர்க்கரை கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முனிஸ்வரன் (23). இவர் தனது அண்ணன் மகள் திருமண பத்திரிகை வைக்க கும்பகோணம் வந்தார்.

கடந்த 28-ந் தேதி வந்த அவர் கும்பகோணம் பிரம்மன் அரசலாறு வழிநடப்பில் உள்ள சுரேஷ் வீட்டில் தங்கி அவரது மகன் ராமமூர்த்தியுடன் சென்று உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வைத்தார்.

நேற்று இரவு 10.30 மணியளவில் முனிஸ்வரன் தனது ஊருக்கு செல்ல பிரம்மன் அரசலாறு வழி நடப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்களை அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் முனிஸ்வரனை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது முன் விரோதம் காரணமாக இக் கொலை நடைபெற்றது தெரியவந்தது. முனிஸ்வரன் கடந்த 2014-ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் வேலை பார்த்துள்ளார். அப்போது சிலருடன் முன் விரோதம் இருந்துள்ளது. இவர் மீது அடி தடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி வந்துள்ளார். இந்த நிலையில் முனிஸ்வரன் தற்போது திருமண பத்திரிகை வைக்க வந்திருப்பதை அறிந்த அக் கும்பல் நோட்டமிட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இக்கொலை கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com