பேரணாம்பட்டு தோல் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தோல் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பேரணாம்பட்டு தோல் அதிபர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு டவுன் சின்ன மசூதி தெருவை சேர்ந்தவர் முஹம்மத்ரசாக் (54).தோல் தொழிலதிபர். இவர் பெங்களூருவில் தனது தங்கை புதியதாக கட்டியுள்ள வீடு கிரகபிரவேசத்திற்கு சென்றார்.

நேற்று மாலை அவர் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் அறையில் பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் ரொக்க பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கொள்ளையர்கள் வீட்டின் அருகிலுள்ள காலி மனை பகுதியிலிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பின்பக்க வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com