தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி

நாட்டில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம்
மாமல்லபுரம்
Published on

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மார்ச் 18-ந்தேதி முதல் மூடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தஞ்சையில் பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com