பெரியபாளையம் அருகே தொழிலாளர்கள் போராட்டம்

பெரியபாளையம் அருகே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பொருட்களை கொண்டு வந்து இருப்பு வைத்து தேவைப்படும் போது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுமை தூக்கும் பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கோரி குடும்பத்துடன் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் நாகேஸ்வரராவ், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, சம்பத், ரவி, அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com