

பெரிய பாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள செங்காத்தாகுளம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதில், மேற்பார்வையாளராக ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் 2 விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு விற்பனை பணம் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு சீனிவாசன் கடையை பூட்டி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் மதுக்கடையின் கிரில் மற்றும் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பெரியபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த ரூ.2 லட்சத்தை சீனிவாசன் வீட்டிற்கு எடுத்து சென்றதால் அது தப்பியது.
கடைசி நேரத்தில் விற்பனையான பணம் மட்டும் கடையில் இருந்ததாக தெரிகிறது. அதனை கொள்ளையர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். மேலும் மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்று இருப்பதாக தெரிகிறது.