பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
Published on

தேவதானப்பட்டி:

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த 3 வருடங்களாகவே காலனி பகுதியில் தண்ணீர் வினியோகம் சீராக வர வில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவதானப்பட்டி - வைகை அணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com