பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் முதியவர் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே சொத்து தகராறில் முதியவரை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் அருகே சொத்து பிரச்சினையில் முதியவர் மீது தாக்குதல்
Published on

தேனி:

பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சின்னமணி (வயது 80). இவரது மகன்கள் அர்ச்சுணன், தர்மலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று அர்ச்சுணன், தர்மலிங்கம் மற்றும் அவரது மகன் தமிழரசன் ஆகியோர் சின்னமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அர்ச்சுணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com