பெரியகுளம் அருகே கிடங்கில் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் திருட்டு

பெரியகுளம் அருகே கிடங்கில் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூண்டு
பூண்டு
Published on

தேனி:

கொடைக்கானல் மேல் மலைப்பகுதியான மன்னவனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளைப் பூண்டுகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

இந்த பூண்டுகள் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி கமி‌ஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் வடுகட்டியில் அதிக அளவு வெள்ளைப்பூண்டு வியாபாரிகள் உள்ளனர். சோழியசெட்டியார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகன் ஞானபிரகாஷ் (36). வெள்ளைப்பூண்டு வியாபாரி. இவருக்கு சொந்தமான கிடங்கில் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் சேமித்து வைத்திருந்தார். சம்பவத்தன்று மூடைகளை கணக்கு பார்த்தபோது அதில் 8 மூடை வெள்ளைப்பூண்டுகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com