புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் சென்றார்

பேரறிவாளன் நேற்று புழல் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
பேரறிவாளன்
பேரறிவாளன்
Published on

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 8 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பேரறிவாளன், புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

இதையடுத்து பேரறிவாளன் நேற்று புழல் சிறையில் இருந்து ஒரு மாதம் பரோலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com