வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி பேரறிவாளனுக்கு மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
Published on

வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்று மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதந்தோறும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

பேரறிவாளன் 2 மாதம் பரோலில் சென்றபோது ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரோல் முடிந்து கடந்த 24-ந்தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இன்று அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் பேரறிவாளனை பாதுகாப்புடன் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com