வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதி பேரறிவாளனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடந்தது.
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
Published on

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று மூட்டுவலி நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக தொற்று நோய்க்கு ஆபரே‌ஷன் நடந்தது. இதனை தொடர்ந்து மாத்திரை மருந்து சாப்பிட்டு வருகிறார்.

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

வேலூர் ஜெயிலில் இருந்து இன்று பேரறிவாளனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

அங்கு சிறுநீரக தொற்று, மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் பேரறிவாளனை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com