பெரணமல்லூர் அருகே மின்மோட்டார், என்ஜின் திருடிய 4 பேர் கைது

பெரணமல்லூர் அருகே மின்மோட்டார் மற்றும் என்ஜின் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சேத்துப்பட்டு:

பெரணமல்லூரை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரகுபதி (வயது 36), ஏழுமலை (40). இவர்களுடைய விவசாய நிலம் அன்மருதை கிராமம் செய்யாற்றுப்படுகை அருகில் உள்ளது. தங்களின் நிலத்தில் நீர்ப்பாய்ச்சுவதற்காக ரகுபதி மின் மோட்டாரையும், ஏழுமலை ஆயில் என்ஜினையும் பயன்படுத்தி வந்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணன் (24), சந்துரு (24), முத்துவேல் (27), வினோத் (23) ஆகிய 4 பேர் மின் மோட்டார் மற்றும் ஆயில் என்ஜினை திருடிக் கொண்டு வாழைப்பந்தல் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரணமல்லூர் போலீசார் ரோந்து வருவதைப் பார்த்ததும், அவர்கள் மின்மோட்டாரையும், என்ஜினையும் கீழே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதைப்பார்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 4 பேரும் அவற்றை திருடியது தெரிய வந்தது.

பின்னர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கன்னியப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் விட்டுச் சென்ற ஆயில் என்ஜின், மின் மோட்டார் ஆகியவற்றை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com