பெரணமல்லூர் அருகே பள்ளி மாணவன் தற்கொலை

பெரணமல்லூர் அருகே பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரணமல்லூர் அருகே பள்ளி மாணவன் தற்கொலை
Published on

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் அடுத்த பில்லாந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகன் கோபி (வயது19). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சரியாக படிக்காததை கண்டித்து கோபியை அவரது தந்தை ஏழுமலை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கோபி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் கோபியை ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பெரணமல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com