வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் சேதம்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
வீடு தீ விபத்து
வீடு தீ விபத்து
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு வயல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மதியம் திடீரென கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பாத்திரங்கள், துணிமணிகள், பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த குன்னம் தாசில்தார் சின்னத்துரை, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமாக அரிசி, துணிமணிகள் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com