பணிச்சுமை காரணமா?- ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு மரணம்

பணிச்சுமை காரணமாக ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமர்
ராமர்
Published on

மதுரை:

மதுரை பேரையூர் அருகில் உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராமர் (வயது29). மதுரை ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தம். இவர்களுக்கு 6, 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் ராமர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ராமருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதவிர ராமருக்கு பணிச்சுமை காரணமாக மனவருத்தம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமர் இன்று அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று ஏட்டு ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராமரின் உடலை பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

ஏட்டு ராமர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com