ரெயில்வே பெண் ஊழியர்கள் பாதுகாப்புக்காக ‘பெப்பர் ஸ்பிரே’

தென்னக ரெயில்வேயில் முதன்முறையாக ரெயில் நிலையங்கள், லெவல் கிராசிங்குகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கபட உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சமீப காலமாக பெண்கள் தனியாக இருக்கும் போது மட்டுமல்ல ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் கூட பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

செயின் பறிப்பு திருடர்களால் தாக்கப்படுகிறார்கள். கடத்தல்காரர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.

பணியிடங்களிலும் பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தென்னக ரெயில்வே பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்க முடிவு செய்துள்ளது.

சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ‘லெவல்கிராசிங்’கில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சுய பாதுகாப்புக்காக விரைவில் ‘பெப்பர் ஸ்பிரே’ (மிளகு ஸ்பிரே) வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அனுமதி அளித்து அதனை செயல்படுத்த நிதி ஒதுக்கி உள்ளார்.

ரெயில் நிலையங்கள், லெவல் கிராசிங்குகளில் இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இந்த ‘பெப்பர் ஸ்பிரே’ பாலியல் கொடுமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வேயில் பெண் ஊழியர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். தனியாக மற்றும் இரவு நேரங்களில் பணிபுரியும் போது பாலியல் கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் பெண் ஊழியர்களுக்காக விரைவில் ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com