திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து அதிகரிப்பு

திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து அதிகரித்து உள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து அதிகரிப்பு
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் ஊட்டி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு மற்றும் கேரளாவில் அதிகமாக மிளகு பயிரிடப்படுகிறது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், கொடைக்கானலில் 875 எக்டேரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வாரத்திற்கு ஒருமுறை 2 டன் மிளகு விற்பனைக்கு வரும்.

மிளகு வரத்து குறைவாக இருக்கும்போது ஒருகிலோ ரூ.900 முதல் ரூ.1500 வரை விற்பனையாகும். தற்போது கேரளாவில் மிளகு சாகுபடி அதிகரித்துள்ளதால் மிளகு வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ஒருகிலோ மிளகு ரூ.800க்கு விற்றது. வரத்து அதிகரிப்பால் நேற்று ரூ.100 வரை விலைகுறைந்து கிலோ ரூ.700 க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com