குடியுரிமை சட்டத்தை இங்கு அமல்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா - மலேசியா பிரதமர் கருத்து

குடியுரிமை சட்டத்தை மலேசியாவில் அமல்படுத்தினால் என்ன நிகழும் என்று உங்களுக்கே தெரியும் என அந்நாட்டு பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாதீர் பின் முகமது
மகாதீர் பின் முகமது
Published on

கோலாலம்பூர்:

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சட்டத்தை குறித்தும், போராட்டங்களை குறித்தும் உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உரிமைக்காக அமைதியாக போராடும் மக்களுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தின் அடிப்படையே பாரபட்சமாக உள்ளது என ஐ.நா சபை கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் மகாதீர் பின் முகமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

‘மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா, இப்போது சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன்."

நாம் இதை இங்கே செய்தால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டில் மிகப்பெரிய குழப்பமும் உறுதியற்ற தன்மையும் ஏற்படும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுவார்கள்’, என அம்மாநாட்டின் போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மகாதின் பின் முகமது தெரிவித்தார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி அளித்துள்ளது. ‘மலேசிய பிரதமர் கூறிய கருத்து உண்மையிலேயே தவறானது. உண்மைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியாவின் உள்துறை விவகாரங்களை பற்றி மலேசியா கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்’ என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com