திருக்காஞ்சியில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் நீரில் மூழ்கி பலி

திருக்காஞ்சி மாசி மக விழாவில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் நீரில் மூழ்கி பலியானார்.
திருக்காஞ்சியில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் நீரில் மூழ்கி பலி
Published on

திருபுவனை:

திருபுவனையை அடுத்த கொத்தபுரிநத்தத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 71) பால் கறக்கும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

முருகன், மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். மணிகண்டன் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் முருகன் நேற்று திருக்காஞ்சியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் தந்தைக்கு திதி கொடுக்க சென்றார்.

அப்போது நீரில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். அங்கிருந்தவர்கள் முருகனை மீட்டனர். ஆனால், முருகன் இறந்து விட்டது தெரிய வந்தது.

உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் சென்று பிணத்தை கைப்பற்றி கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com