வேலை செய்த இடத்தில் கட்டிட தொழிலாளி சுருண்டு விழுந்து பலி

பீளமேடு அருகே வேலை செய்த இடத்தில் கட்டிட தொழிலாளி சுருண்டு விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மரணம்
தொழிலாளி மரணம்
Published on

கோவை:

கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள வெங்கிட்டபுரத்தை சேர்ந்தவர் தனபால் (30) கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பீளமேடு சேரன் மாநகரில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com