

பாட்னா:
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது சம்பாரன் மாவட்டம். இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தின் வால்மீகி நகர் காட்டுப் பகுதிகளில் மத்திய ஆயுதப்படை காவலர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் போதை பொருட்கள் இருந்ததையடுத்து அவரை கைது செய்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.