ஆபிஸ் பியூனை லட்சாதிபதியாக மாற்றிய பேடிஎம்: 25 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாயினர்

இந்தியாவின் மிகப்பெரிய பேமண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் ஊழியர்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், தனது முன்னாள், இன்னாள் ஊழியர்கள் பலரை கோடீஸ்வரர் மற்றும் லட்சாதிபதிகளாக மாற்றியுள்ளது. #Paytm
ஆபிஸ் பியூனை லட்சாதிபதியாக மாற்றிய பேடிஎம்: 25 ஊழியர்கள் கோடீஸ்வரர்களாயினர்
Published on

இந்தியாவின் மிகப்பெரிய பேமண்ட் சேவை நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம், ஸ்டார்ட் அப் நிறுவனமாக சிறிய அளவில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பேடிஎம்-ன் பயன்பாடு பெரிதளவில் அதிகரித்தது.

அலிபாபா மற்றும் ஒன் 97 ஆகிய பேரண்ட் நிறுவனங்களை கொண்ட பேடிஎம் தற்போது தனது வியாபாரத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தது. புதிய முதலீடுகளைப் பெற முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளையே முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு தற்போது இருக்கும் முதலீட்டாளர்களை இழக்க வேண்டாம் என்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளை அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழியர்களின் பங்குகள் விற்கப்பட்டன.

இந்த விற்பனையால் நூற்றுக்கும் பேற்பட்ட பேடிஎம் ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் மற்றும் லட்சாதிபதிகளாக தற்போது மாறியுள்ளனர். 20 முதல் 25 ஊழியர்கள் 6 - 7 கோடி ரூபாயை இதன் மூலம் பெற்றுள்ளனர். அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஆபிஸ் பியூன் 20 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com