பட்டுக்கோட்டையில் கடை ‌ஷட்டரை உடைத்து பணம் திருட்டு

பட்டுக்கோட்டையில் கடை ‌ஷட்டரை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்தவர் கைலாசம். இவர் பட்டக்கோட்டை நீதிமன்றத்துக்கு எதிரில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் அவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு கடை ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த ரூ.13 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் கைலாசம் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பணம் திருடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com