புரோ கபடி: தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ்

புரோ கபடி: தொடர்ச்சியாக 3-வது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாட்னா பைரேட்ஸ்

சென்னையில் இன்று நடைபெற்ற ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
Published on

5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் 23-ம் தேதி தொடங்கின. கடைசி பிளேஆப் போட்டியாக ‘குவாலிபையர்2’ ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

இந்த தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் பெங்கால் ஒரு தடவை 41-38 என்ற கணக்கில் வென்று இருந்தது. மற்ற 2 ஆட்டமும் 37-37 மற்றும் 36-36 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது.

போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் பாட்னா அணி 21-12 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இருப்பினும் இராண்டாம் பாதிநேர ஆட்டத்தில் பெங்கால் அணி மிகவும் கவனமாக விளையாடியது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்தனர். இறுதியில் பாட்னா அணி 47-44 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com