பத்தனம்திட்டா அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பத்தனம்திட்டா அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

பெரும்பாவூர்:

பத்தனம்திட்டா மாவட்டம் பாலா அருகே உள்ள சேர்ப்புங்கள் பகுதியை சேர்ந்தவர் சாபு (வயது 52). இவருடைய மனைவி ஜலஜா. இவர்களுக்கு சணல், சாஜன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சாபு நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சாபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சேர்ப்புங்கள் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com