விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: நள்ளிரவில் பயணிகள் ரெயிலில் பயங்கர தீ

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காட்பாடி செல்ல இருந்த பயணிகள் ரெயில் பெட்டியில் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: நள்ளிரவில் பயணிகள் ரெயிலில் பயங்கர தீ
Published on

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காட்பாடி செல்ல இருந்த பயணிகள் ரெயில் பெட்டியில் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சோமசேகர் இன்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

ரெயில்வே ஊழியர்களிடம் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? புகை ஏற்பட்ட போது ஏதாவது வாசம் வந்ததா? என்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளர் உதய குமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் திருச்சியில் இருந்து பல்லவன் ரெயில் மூலம் விழுப்புரம் வந்தனர்.

தீ விபத்துக்குள்ளான பெட்டியை உதயகுமார் ரெட்டி பார்வையிட்டார். அந்த ரெயில் பெட்டில் ஏறி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தீ வைத்தது யார்? மர்ம நபர்களா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் ரெயில்வே நடைமேடை மேம்பாலத்தின் மேலே ஏறிச்சென்று தீப்பிடித்து எரிந்த பெட்டியின் கூரைப் பகுதியை பார்வையிட்டார். எந்தெந்த பகுதியில் தீப்பிடித்து என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

ரெயில்வே துறைக்கு சொந்தமான பிளாக்கி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தீ விபத்துக்குள்ளான ரெயில் பெட்டி மீது ஏறி மோப்பம் பிடித்தது. குற்றவாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீப்பிடித்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்த பின்னர் திருச்சி கோட்ட மேலாளர் உதய குமார் ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, “இது ஒரு விபத்து. எதிர்பாராத விபத்து. இந்த விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com