

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் போயிங் 737 ரக ஜெட் விமானம் சுமார் 150 பயணிகளுடன் மெக்சிகோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்பட்டு வந்தது. அமெரிக்க நேரப்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலைத்தில் தரையிறங்கியது.
ஓடுபாதையை கடந்து பயணிகளை இறக்கிவிடும் ஏணிப்படி வாகனத்தை நோக்கி ஊர்ந்து சென்றபோது விமான நிலையத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு லாரி குறுக்கே வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் மீது ஏரோமெக்சிகோ விமானம் பயங்கரமாக மோதியது.