ராமநாதபுரத்தில் இலக்கிய விழா- அன்வர் ராஜா எம்.பி. பங்கேற்பு

ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்க இலக்கிய விழா நடந்தது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கலந்து கொண்டார்.
ராமநாதபுரத்தில் இலக்கிய விழா- அன்வர் ராஜா எம்.பி. பங்கேற்பு
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்க இலக்கிய விழா பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தலைமையில் நடந்தது. தமிழ்ச்சங்கத் தலைவர் அப்துல்சலாம், துணைத் தலைவர் கருணாநிதி, வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரத்தில் சில ஆண்டுகளாக புத்தக விழா நடத்தப்படவில்லை. அரசை நம்பியிருக்காமல் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழாவை நடத்தும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அந்த அமைப்பே புத்தகத் திரு விழாவை நடத்த வழிவகை செய்யப்படும். இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என்றார்.

முன்னதாக வழக்கறிஞர் முனியசாமி வரவேற்றார். செந்தில்குமார் ’’சங்க இலக்கியத்தேன்‘‘ என்ற தலைப்பில் பேசினார். சக்தி.ஜோதி எழுதிய சங்கப் பெண் கவிதைகள் என்ற நூலை அன்வர்ராஜா எம்.பி. வெளியிட முதல் பிரதியை பேராசிரியை தேன்மொழி.பாலகிருஷ்ணன், உறுப்பி னர்கள் விஜயராணி கருணாநிதி, ஆசிரியை முருகவேணி, முனியசாமி, இளங்கோவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாடகர்கள் வாசு, கருணாகரன், வர்த்தக சங்கத் தலைவர் அன்வர்தீன், வேளாண்மை உதவி இயக்குநர் ஷேக் அப்துல்லா, வழக்கறிஞர் அழகு.பால கிருஷ்ணன், கவிஞர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com