பாரிமுனையில் வாலிபரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு

பாரிமுனையில் வாலிபரிடம் ரூ.2 லட்சம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரிமுனையில் வாலிபரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு
Published on

சவுகார்பேட்டை, தங்க சாலையை சேர்ந்தவர் வசந்த். இவர் நாராயணமுதலி தெருவில் உள்ள நோட்டு புத்தகம் மொத்த விற்பனை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மதியம் கடை உரிமையாளர் முகேஷ் வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து வரும்படி ‘காசோலை’யை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.

வசந்த் பாரிமுனை ரத்தன் சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்துக் கொண்டு திரும்பி நடந்து வந்தார்.

கோவிந்தப்பா- ஆதியப்பா தெரு சந்திப்பில் வந்தபோது பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென வசந்தை தட்டி அழைத்தனர். அவர் திரும்பி பார்த்தபோது முன்னாள் சென்ற மற்றொரு 2 வாலிபர்கள் வசந்த் வைத்திருந்த பணப்பையை பறித்து தப்பி ஓடிவிட்டனர்.

வசந்தின் கவனத்தை திசை திருப்பி 4 பேர் கும்பல் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com