மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் தீவிர வாக்குசேகரிப்பு

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் முனைவர் சாம்பால் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் கையில் மாம்பழத்தை ஏந்தியபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #PMK
மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால் தீவிர வாக்குசேகரிப்பு
Published on

வில்லிவாக்கம்:

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடும் முனைவர் சாம்பால் திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், சேப்பாக்கம், அண்ணாசாலை, புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் கையில் மாம்பழத்தை ஏந்தியபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் முனைவர் சாம்பாலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சிறுபாண்மை பிரிவு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சாம்பால் கலந்து கொண்டார், அப்போது அவர், இஸ்லாமி யர்களின் உற்ற தோழனாக அவர்களின் பாதுகாவலனாக இருந்து பணி செய்ய என்னை மாம்பழம் சின்னத்தில் வாக் களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

அவருடன் தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ.,உட்பட அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #PMK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com