நாடும் நமதே-நாற்பதும் நமதே: முரளிதரராவ் பேட்டி

நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது என்று முரளிதரராவ் கூறியுள்ளார். #LokSabhaElectoins2019 #MuralidharRao
நாடும் நமதே-நாற்பதும் நமதே: முரளிதரராவ் பேட்டி
Published on

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.

300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு.

இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.

தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.

நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElectoins2019 #MuralidharRao

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com