கல்லுக்குட்டை பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவேன் - இசக்கிசுப்பையா வாக்குறுதி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். #LokSabhaElections2019
கல்லுக்குட்டை பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தருவேன் - இசக்கிசுப்பையா வாக்குறுதி
Published on

போரூர்:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் இசக்கிசுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று தேனாம்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய இசக்கி சுப்பையா, நேற்று மாலை கந்தன்சாவடி 184வது வட்டம் கல்லுக்குட்டை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றேன். கடந்த 20 ஆண்டுகளாக ஏறத்தாழ 4ஆயிரம் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இருந்த எந்த அரசும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிவுநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை. மாறாக அவர்களைமுற்றிலும் புறக்கணித்து வருகின்றனர்.

நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். கல்லுக்குட்டை மக்களின் தேவைகளை நிறைவேற்றி தந்திட அனைவரும் மறவாமல் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவருடன் மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், அமைப்பு செயலாளர் திருவான்மியூர் முருகன், பகுதி செயலாளர்கள் அர்ஜுனன், ராஜேந்திரன், வட்ட செயலாளர் கண்ணன் வர்த்தகர் அணி ராமர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மகாலிங்கம் உள்ளிட்ட மாவட்ட பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

X

Maalai Malar
www.maalaimalar.com