பாரீஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா விலகல்

பாரீஸ் பருவ நிலை மாற்றம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
பாரீஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா விலகல்
Published on

வாஷிங்டன்:

காற்றில் கார்பன்டை ஆக்சைடு கழிவுகள் அதிகமாக கலப்பதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பனி ஆறுகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகள் கடலில் முழ்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகமாக மழையும், வறட்சியும் ஏற்படுகிறது. 

இதனையடுத்து, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர்.

 அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்ததை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்திய, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அமெரிக்க இந்த முடிவை அறிவித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறியோவதாகவும், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடும் நாடுகளில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com