காடையாம்பட்டியில் ஆயாவின் நடத்தை கண்டித்து சத்துணவு கூடத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

வாலிபருடன் சத்துணவு கூட ஆயா உல்லாசமாக இருந்தது குறித்து தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் இன்று காலை சத்துணவு கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த தீவட்டிபட்டி ஊராட்சி கலர்காடு பகுதியில் குழந்தைகளுக்கான சத்துணவு மையம் உள்ளது. இங்கு 20 குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்த மையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தைகளை பராமரிக்கும் ஆயாவாக உள்ளார்.

இந்த ஆயாவை பார்க்க வாலிபர் ஒருவர் தினமும் சத்துணவு மையத்துக்கு வருவார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கும் ஆயா பகலில் அவருடன் உல்லாசமாக இருப்பாராம்.

இது குறித்து குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் கூறி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்கள் இருவரையும் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சத்துணவு மையத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள் அந்த ஆயா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். சத்துணவு கூடத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பலமுறை ஆயாவை கண்டித்தும் அவர் திருந்துவதாக தெரியவில்லை என்றும் கூறினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் அங்கு வந்து முற்றுகையிட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com