தாய் மாமனை கல்லால் அடித்து கொன்ற ஊழியர் - தாயை திட்டியதால் ஆத்திரம்

பரங்கிமலையில் தாயை திட்டியதால் போதையில் இருந்த தாய் மாமனை கல்லால் அடித்து கொன்ற ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆலந்தூர்:

பரங்கிமலை அருகே ஆலந்தூர் ஆசர்காபா தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (31). கொரியர் நிறுவன ஊழியர்.

இவரது தாய் சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் என்ற அப்புன் (60). தொழிலாளி. அதே பகுதியில் வசித்து வரும் இவர் அடிக்கடி குடி போதையில் கோகுல்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவு வழக்கம் போல் குடிபோதையில் சென்ற எத்திராஜ், சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை ஆத்திரம் அடைந்த கோகுல்ராஜ் கல்லால் எத்திராஜின் முகத்தில் தாக்கினார்.

காயம் அடைந்த எத்திராஜ் தொடர்ந்து திட்டியவாறே அங்கிருந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற கோகுல்ராஜ் மீண்டும் கல்லால் எத்திராஜின் தலை, முகத்தில் சரமாரியாக தாக்கினார்.

இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று கோகுல்ராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com