பரமத்திவேலூர் அருகே மொபட் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி

பரமத்திவேலூர் அருகே மொபட் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் காட்டு தெருவை சேர்ந்த மருதநாயகம் மகன் முருகன் (வயது 24). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் பரமத்திவேலூர் செட்டியார் தெருவைச் சேர்ந்த காளிமுத்து மகன் மேகநாதன் (24). இவருடைய மொபட்டில் முருகன் பின்னால் அமர்ந்து கபிலர்மலை சாலையில் பரமத்திவேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பொத்தனூர் அருகே ஒரு தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது பரமத்தி வேலூரில் இருந்து கபிலர்மலை நோக்கி சென்ற கார் ஒன்று எதிரே வந்த மொபட் மீது மோதியுள்ளது. இதில் மொபட்டில் வந்த மேகநாதன், முருகன் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் முருகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.படுகாயமடைந்த மேகநாதனை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், கார் டிரைவர் பொத்தனூர் சக்கரா நகரைச் சேர்ந்த செந்தூரன் (40) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com