பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
Published on

பரமக்குடி:

காட்டுப் பரமக்குடி வேளாளர் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் சவுந்திரபாண்டியனின் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவைத்துள்ளார். அதை நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து செல்லமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைப்பு சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com