பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி காயம்

பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காயம்
விபத்து காயம்
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே உமையாள்புரம் காமராஜ் காலனியை சேர்ந்தவர் துளசி (வயது 70), சம்பவத்தன்று இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பாபநாசம் ரயில்வே ஸ்டேசன் மெயின்ரோட்டில் நடந்துவந்துகொண்டிருந்தார். அப்போது செம்மங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து மூதாட்டி துளிசி மீது மோதிவிட்டார். இதில் பலத்த படுகாயம் அடைந்த துளசி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com