பண்ருட்டி அருகே காதலன் தற்கொலை- காதலி வி‌ஷம் குடித்தார்

பண்ருட்டி அருகே காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அருகே காதலன் தற்கொலை- காதலி வி‌ஷம் குடித்தார்
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன்(வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரி(20). கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த நிலையில் பார்த்தீபனுக்கும் செல்வகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவரம் செல்வகுமாரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

பார்த்தீபனுக்கு தெரிய வந்தது. அவர் மனம் உடைந்தார். நேற்று முன்தினம் இரவு பார்த்தீபன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தனது காதலன் தற்கொலை செய்து கொண்டது பற்றி தகவல் அறிந்த செல்வ குமாரி மிகுந்த மனவேதனை அடைந்தார்.

வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

வீட்டில் இருந்தவர்கள் செல்வகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com