பந்தநல்லூரில் சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

பந்தநல்லூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாராய விற்பனை குறித்து பொதுமக்கள் தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வந்தனர். இந்தநிலையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்- இன்ஸ்பெக்டர் காசிஅய்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கருப்பூர் காளியம்மன் கோவில் தெரு கலியபெருமாள்(39), காட்டூர் அம்பலகாரத்தெரு அருள்( 36), செறுகடம்பூர் வடக்குத்தெரு அய்யாபிள்ளை(37), பந்தநல்லூர் சிவன் மேலவீதி ராதாகிருஷ்ணன் மனைவி மாரியம்மாள்(35) ஆகியோர் அனுமதியின்றி மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com