

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபர் பெருமாள் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46). இவர் பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி - பெங்களூர் சாலையில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டு அருகே பெருமாள் தனது நண்பரான செந்தில்குமாரிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க மறுத்ததுடன், ஆபாச வார்த்தையால் திட்டி, கையாலும் அடித்ததுடன், கத்தியால் வயிற்றின் இடது புறம் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பெருமாள் போலீசிடம், செந்தில்குமார் தன்னை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் வயிற்றில் குத்தியதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.