பனவடலிசத்திரம் அருகே மனைவியை தாக்கிய வாலிபர் கைது

பனவடலிசத்திரம் அருகே தகராறில் மனைவியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பனவடலிசத்திரம் அருகே மனைவியை தாக்கிய வாலிபர் கைது
Published on: 

சங்கரன்கோவில்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்தவர் பவுன்துரை (வயது33). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ் (27). பவுன்துரை இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். இதனால் மகேஸ் கணவரை கண்டித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

வாக்கு வாதம் முற்றவே பவுன்துரை மனைவியை அருகில் கிடந்த கம்பை எடுத்து அடித்து உதைத்துள்ளார். இது குறித்து மகேஸ் அய்யாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பவுன்துரையை கைது செய்தனர்.           

X

Maalai Malar
www.maalaimalar.com