பள்ளிபாளையத்தில் 10 தறிப்பட்டறைகளுக்கு சீல்

பள்ளிபாளையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கிய 10 தறிப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தறிப்பட்டறைகளுக்கு சீல்
தறிப்பட்டறைகளுக்கு சீல்
Published on

பள்ளிபாளையம்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் அதிகாரிகள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கிய 10 தறிப்பட்டறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அந்த தறிப்பட்டறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும் ரூ.4 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com