

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கை அணி 7.4 ஓவரில் 41 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. டிக்வெல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து குசால் மெண்டில் ஜோடி சேர்ந்தார். குணதிலகா 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பிங் ஆகி ஆட்டம் இழந்தார். மெண்டிஸ் 19 ரன்னில் சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் தரங்காவை 9 ரன்னில் பாண்டியா வெளியேற்றினார்.
மேத்யூஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் வெளியேற இலங்கை அணி 121 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்துள்ளது.