வேலையில் பிஸி - அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப்பில் தாயின் இறுதிச்சடங்கை பார்த்த மகள்

பணியில் பிஸியாக இருந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத மகள், அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக இறுதிச்சடங்கை பார்த்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார். அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.

அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com