குரங்கணி வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க பாளை தீயணைப்பு படை வீரர்கள் குழு விரைவு

குரங்கணி வனப்பகுதியில் காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்க பாளை தீயணைப்பு படை வீரர்கள் குழு விரைந்துள்ளனர்.
குரங்கணி வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க பாளை தீயணைப்பு படை வீரர்கள் குழு விரைவு
Published on

நெல்லை:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கனி மலைப்பகுதியில் மலை ஏறும் பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டு தீயில் சிக்கி தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையில் இருந்து வீரர்கள் விரைந்துள்ளனர்.

பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் 17 வீரர் கள் நேற்று இரவு ஒரு குழுவாக போடிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று காலை தீப்பற்றி எரியும் மலைப்பகுதியை அடைந்தனர்.

அங்கிருந்து பயிற்சி பெற்ற மலை ஏறும் வீரர்களுடன் இன்று மலை ஏற தொடங்கி உள்ளனர். அவர்களுடன் முதலுதவிக்கு தேவையான சாதனங்களையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களிடம் நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் தொடர்பு கொண்டு போடி மலையில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணி குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.   #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com