பழவந்தாங்கலில் பங்கு சந்தை ஆலோசகரை வெட்டி கொல்ல முயற்சி: போலீசார் விசாரணை

பழவந்தாங்கலில் இன்று காலை பங்கு சந்தை ஆலோசகரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழவந்தாங்கலில் பங்கு சந்தை ஆலோசகரை வெட்டி கொல்ல முயற்சி: போலீசார் விசாரணை
Published on

ஆலந்தூர்:

நங்கநல்லூர் 6-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம் (வயது48). பங்குச் சந்தை முதலீடு ஆலோசகர். வங்கி, தனியார் லோன்களும் வாங்கி கொடுத்து வந்தார்.

இன்று காலை அவர் பழவந்தாங்கல் வோல்டாஸ் சாலையில் உள்ள பள்ளியில் மகளை இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கல்யாணசுந்தரம் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார்.

மர்ம கும்பல் கல்யாண சுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கூச்சலிட்ட படி திரண்டனர்.

உடனே கொலைவெறி கும்பல் ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த கல்யாணசுந்தரத்துக்கு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் இந்த கொலை முயற்சி நடந்ததாக தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com