பழனியில் முதல் முறையாக தயாரிப்பு தேதியுடன் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை

பழனியில் முதல் முறையாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி தயாரிப்பு தேதியுடன் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பு தேதியுடன் விற்பனை செய்யப்பட்டும் பஞ்சாமிர்தம்.
தயாரிப்பு தேதியுடன் விற்பனை செய்யப்பட்டும் பஞ்சாமிர்தம்.
Published on

பழனி:

பழனி என்றாலே பஞ்சாமிர்தம் என்று உலக அளவில் அனைவருக்கும் பிரசித்தமான ஒன்றாகும். பழனி பஞ்சாமிர்தம் ஆண்டு தோறும் பல கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழம், கற்கண்டு, பேரிச்சம்பழம் போன்ற பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயார் செய்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

பஞ்சாமிர்தத்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். முன்பு எல்லாம் பஞ்சாமிர்த கலவை கைகளால் கரைக்கப்பட்டது. இப்போது நவீன இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் கரைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் இரண்டு வகையான டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.35-க்கும், டின் பேக் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு தேதி காலாவதியாகும் தேதி போன்றவை குறிப்பிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சாமிர்தத்தில் தயாரிப்பு தேதி காலாவதியாகும் தேதி போன்றவை குறிப்பிடப்பட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தற்போது கோவில் நிர்வாகம் பஞ்சாமிர்த டப்பாக்களில் தயாரிப்பு நாள், பின்னர் 15 நாட்கள் பயன்படுத்தலாம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com