பழனி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை

பழனி அருகே விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை
Published on

பழனி:

பழனி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் சிவபிரகாசம். அவரது மனைவி சுகுணா (வயது 42). இவர்களது மகன் அஜித்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வாகன விபத்தில் இறந்துவிட்டார். மகன் இறந்த துக்கத்தை மறக்கமுடியாமல் சுகுணா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கடந்த 3-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, சுகுணா மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயங்களுடன் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுணா இறந்தார்.

இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com